வாக்கிய வகை அறிதல்

கருத்து முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும். வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும், அமைப்பு அடிப்படையிலும், வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். கருத்து வகை வாக்கியங்கள் கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை: செய்தி வாக்கியம் கட்டளை வாக்கியம் வினா வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும். எ.கா: ஔவையார் ஆத்திச்சூடியை எழுதினார். கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும். எ.கா: புத்தகத்தைப் படி. வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும். எ.கா: ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும். எ.கா: இந்த மலர் எவ்வளவு அழகாக உள்ளது! அமைப்பு வகை வாக்கியங்கள் வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, தனி வாக்கியம் தொடர் வாக்கியம் கலவை வாக்கியம் தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும். எ.கா: அமுதா வந்தாள். அமுதாவும் கவிதாவும் வந்தனர். தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும். எ.கா: இனியன் நன்கு படித்தான்; தேர்வு எழுதினான்; வெற்றி பெற்றான். கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும். எ.கா: நல்ல நெறிகளைக் கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும். வினை வகை வாக்கியங்கள் வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள் செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள் தன்வினை / பிறவினை வாக்கியங்கள் உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள் இவ்வகை Read More.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்!

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். (எடுத்துக்காட்டு ) மெய், வாய், கண், கன்னம் மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைத் தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். ………………………………………………………………………………………………… மூவண்ணம் – காவி, வெண்மை, பச்சை ………………………………………………………………………………………………… மூவேந்தர்கள் – சேரன், சோழன், பாண்டியன் ………………………………………………………………………………………………… முக்கனி – மா, பலா, வாழை ………………………………………………………………………………………………… முத்தமிழ் – இயல், இசை, நாடகம் ………………………………………………………………………………………………… முப்பால் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ………………………………………………………………………………………………… முக்காலம் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ………………………………………………………………………………………………… முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ………………………………………………………………………………………………… மூன்று முரசு – கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு ………………………………………………………………………………………………… முச்சங்கம் – முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ………………………………………………………………………………………………… மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை ………………………………………………………………………………………………… நாற்திசை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ………………………………………………………………………………………………… நாற்பால் – அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் ………………………………………………………………………………………………… நால்வகை உணவு – உண்ணல், தின்னல், பருகல், நக்கல் ………………………………………………………………………………………………… நால்வகை சொல் – பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ………………………………………………………………………………………………… நான்மறை – ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ………………………………………………………………………………………………… நான்கு குணம் – அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. ………………………………………………………………………………………………… நாற்படை – தேர், யானை, குதிரை, காலாட்படை. ………………………………………………………………………………………………… பாவகை – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ………………………………………………………………………………………………… ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி. ………………………………………………………………………………………………… ஐஞ்சிறுங்காப்பியங்கள் – சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம். ………………………………………………………………………………………………… ஐந்திலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ………………………………………………………………………………………………… ஐந்தொகை – முதல், Read More.

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்!

சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும்.   எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி  அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா) அ. காலையில் கந்தன் எழுந்தவுடன் சென்றான் வேலைக்கு ஆ.காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான் இ.கந்தன் சாலையில் எழுந்தவுடன் வேலைக்கும் சென்றான் ஈ.வேலைக்குச் சொன்றான் கந்தன் சாலை எழுந்தவுடன் விடை இ. கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் பொன்மொழிகளும் புகழ்பெற்ற மேற்கோள்களும் கேட்கப்படும்.மொத்தம் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்  சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்   1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க ஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும். 2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார் ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார் இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை ஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர். 3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர் ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும் இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர். 4.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.  5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக ஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் Read More.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்

விளக்கம் :  கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கானபொருளைத்தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும்வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர,லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல்வேண்டும். ளகர–லகரப் பொருள் வேறுபாடு ரகர–றகர பொருள் வேறுபாடுகள்   னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு

உவமையால் விளக்கப்படும் பொருள்

உவமையை நன்றாக புரிந்து கொண்டால் மிகவும் எளிதாக விடையளிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று தான் உவமையால் விளக்கப்படும் பொருள். இங்கு சில உதாரணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.  

திருக்குறள்

திருக்குறள் நூல் குறிப்புகள்: திருக்குறள் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் உலகப் பொதுமறை, பொய்யாமொழி, முப்பால், தெய்வநூல், உத்தரவேதம், வாயுறைவாழ்த்து, வான்மறை, தமிழ் மறை, என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளில் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் 1330 பாடல்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சார்ந்தவை.அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வருகிறது. நூற் பிரிவுகள்: திருக்குறள் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் :  38 அதிகாரங்கள்  , 4 இயல்கள் பொருட்பால்    :  70 அதிகாரங்கள்  , 3 இயல்கள் இன்பத்துப்பால் :  25 அதிகாரங்கள்  , 2 இயல்கள் ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் : திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31 திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும். திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்: தேவர்,பொய்யாமொழிப் புலவர்,பொய்யில் புலவர்,மாதானுபங்கி,பெருநாவலர்,செந்நாப்போதர்,தெய்வப்புலவர்,நாயனார்,முதற்பாவலர்   திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை: அறத்துப்பால் (1-38) பாயிரம் 1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன் வலியுறுத்தல் இல்லறவியல் 5. இல்வாழ்க்கை 6. வாழ்க்கைத் துணைநலம் 7. மக்கட்பேறு 8. அன்புடைமை 9. விருந்தோம்பல் 10. இனியவை கூறல் 11. செய்ந்நன்றி அறிதல் 12. நடுவுநிலைமை 13. அடக்கம் உடைமை 14. ஒழுக்கம் உடைமை 15. பிறன் இல் விழையாமை 16. பொறை உடைமை 17. அழுக்காறாமை 18. வெஃகாமை 19. புறங்கூறாமை 20. பயனில சொல்லாமை 21. தீவினை அச்சம் 22. ஒப்புரவு அறிதல் 23. ஈகை 24. புகழ் துறவறவியல் 25. அருள் உடைமை 26. புலால் மறுத்தல் 27. தவம் 28. கூடா ஒழுக்கம் 29. கள்ளாமை : 30. வாய்மை 31. வெகுளாமை 32. இன்னா செய்யாமை Read More.

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்ககாலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள் என்றழைக்கப்படுகின்றன. பிற்காலத்தில் தொகை நூல்களை மேல்வரிசை மற்றும் கீழ்வரிசை என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் எனவும், நிறைந்த அடிகளுடைய நூல்களுக்கு மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன இந்நூல்கள் யாவும் பாட்டின் நீளத்தைக் கொண்டே வகைப்படுத்தப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பதினெண் மேற்கணக்கு நூல்கள் =  பத்துப்பாட்டு + எட்டுத்தொகை எட்டுத்தொகை நூல்கள் : நூல் இயற்றியவர் பாடப்பட்ட தலைவன் நற்றிணை 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன பலர் குறுந்தொகை 205 புலவர்கள் பலர் ஐங்குறுநூறு கபிலர் பலர் பதிற்றுப்பத்து பலர் சேரர் பரிபாடல் 13 புலவர்கள் தெரியவில்லை கலித்தொகை நல்லாண்டுவனார் தெரியவில்லை அகநானூறு பலர் பலர் புறநானூறு பலர் பலர் பத்துப்பாட்டு நூல்கள் : நூல்கள் பாடிய புலவர் பாட்டுடைத் தலைவன் திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் நல்லியக்கோடன் சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனார் பலர் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன் நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன் குறிஞ்சிப் பாட்டு கபிலர் பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது முல்லைப்பாட்டு நப்பூதனார் நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் நெடுஞ்செழியன் பட்டினப் பாலை கடியலுர் உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவன் மலைபடுகடாம் பெருங்குன்றப் பெருங்காசிகனார் நவிரமலை நன்னன் [DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.                                                          அறநூல்கள் – 11    அகநூல்கள் – 6     புறநூல் – 1           அறநூல்கள் – 11 நூல்கள் ஆசிரியர்கள் நாலடியார் சமணமுனிவர்கள் நான்மணிக்கடிகை விளம்பிநாகனார் இன்னா நாற்பது கபிலர் இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் திரிகடுகம் நல்லாதனார் ஆசாரக்கோவை பெருவாயின்முள்ளியார் பழமொழி முன்றுரையரையனார் சிறுபஞ்சமூலம் காரியாசன் ஏலாதி கணிமேதாவியர் திருக்குறள் திருவள்ளுவர் முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார்   புறநூல் -1 நூல் ஆசிரியர் களவழி நாற்பது பொய்கையார்   அகநூல்கள் – 6 நூல்கள் ஆசிரியர்கள் ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் ஐந்திணை எழுபது மூவாதையார் திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார் கார் நாற்பது கண்ணன் கூத்தனார் திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை புல்லங்காடனார் அறநூல்கள் விளக்கம்: 1.நாலடியார்  திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது. திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது. அறத்துப்பால் 13. பொருட்பால் 24. காமத்துப்பால் 3 ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும். “செல்வம் சகட கால்போல் வரும்” “கல்வி கரையில கற்பவர் நாள்சில”   2.நான்மணிக்கடிகை கடிகை என்பதற்கு “துண்டு” எனப் பொருள்படும்.         நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு Read More.

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

 வணக்கம் உறவுகளே…டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் 4- க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை  பார்த்திருப்பீர்கள்..அதில் 20 வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது.நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்ததுதான். ஆனாலும் அதில் எல்லோருக்கும் சிறு சிறு குழப்பங்கள் வரும்.அதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பதிகம்.எனவே தமிழைப் பொறுத்தவரை 100 வினாக்களுக்கும் சரியான பதிலை எளிதாக எழுதிவிட முடியும்.அனைத்தும் தமிழ் பொழிப்பயிற்சிக்காகத்தான் கேட்கப்படுகின்றன. அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி? பொருள்: இடம் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் . அகர வரிசைப் படி சொர்களை சீர் செய்வதில் நினைவில் கொள்ள வேண்டிய வரிசை முறை கீழ் வருமாறு அமைய வேண்டும். நிலை -1 உயிரெழுத்துக்கள்[அதாவது : அ,ஆ,இ,ஈ வரிசையில் அமைய வேண்டும்.] (எ.கா): ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல் விடை: அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம் நிலை -2 மெய்யெழுத்துக்கள் (எ.கா): நன்மை, நம்பகம் , நல்லது , நட்சத்திரங்கள் விடை: நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை நிலை -3 உயிர் மெய் எழுத்துக்கள்[அதாவது : க,கா,கி,கீ வரிசையில் அமைய வேண்டும்.] முக்கியக்குறிப்பு: எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது. (எ.கா): மிருகம், முத்து, மௌனம், மதி விடை: மதி , மிருகம், முத்து , மௌனம்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள் செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம் திருவாசகம் இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை நெடுந்தொகை – அகநானூறு பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார் புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை சின்னூல் என்பது – நேமிநாதம் வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம் ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம் பாணாறு – பெரும்பாணாற்றுப்படை முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம். தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள் குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ் உழத்திப்பாட்டு – பள்ளு இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை தமிழர் வேதம் – Read More.