திருக்குறள்

திருக்குறள் நூல் குறிப்புகள்: திருக்குறள் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் உலகப் பொதுமறை, பொய்யாமொழி, முப்பால், தெய்வநூல், உத்தரவேதம், வாயுறைவாழ்த்து, வான்மறை, தமிழ் மறை, என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளில் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் 1330 பாடல்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சார்ந்தவை.அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வருகிறது. நூற் பிரிவுகள்: திருக்குறள் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் :  38 அதிகாரங்கள்  , 4 இயல்கள் பொருட்பால்    :  70 அதிகாரங்கள்  , 3 இயல்கள் இன்பத்துப்பால் :  25 அதிகாரங்கள்  , 2 இயல்கள் ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் : திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31 திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும். திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்: தேவர்,பொய்யாமொழிப் புலவர்,பொய்யில் புலவர்,மாதானுபங்கி,பெருநாவலர்,செந்நாப்போதர்,தெய்வப்புலவர்,நாயனார்,முதற்பாவலர்   திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை: அறத்துப்பால் (1-38) பாயிரம் 1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன் வலியுறுத்தல் இல்லறவியல் 5. இல்வாழ்க்கை 6. வாழ்க்கைத் துணைநலம் 7. மக்கட்பேறு 8. அன்புடைமை 9. விருந்தோம்பல் 10. இனியவை கூறல் 11. செய்ந்நன்றி அறிதல் 12. நடுவுநிலைமை 13. அடக்கம் உடைமை 14. ஒழுக்கம் உடைமை 15. பிறன் இல் விழையாமை 16. பொறை உடைமை 17. அழுக்காறாமை 18. வெஃகாமை 19. புறங்கூறாமை 20. பயனில சொல்லாமை 21. தீவினை அச்சம் 22. ஒப்புரவு அறிதல் 23. ஈகை 24. புகழ் துறவறவியல் 25. அருள் உடைமை 26. புலால் மறுத்தல் 27. தவம் 28. கூடா ஒழுக்கம் 29. கள்ளாமை : 30. வாய்மை 31. வெகுளாமை 32. இன்னா செய்யாமை Read More.

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள் செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம் திருவாசகம் இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை நெடுந்தொகை – அகநானூறு பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார் புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை சின்னூல் என்பது – நேமிநாதம் வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம் ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம் பாணாறு – பெரும்பாணாற்றுப்படை முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம். தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள் குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ் உழத்திப்பாட்டு – பள்ளு இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை தமிழர் வேதம் – Read More.