கம்பராமாயணம்

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. முன்கதைச் சுருக்கம் :  அயோத்தியா மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர். தசரதன், தன் மூத்த மகன் இராமனுக்கு முடிசூட்ட விழைந்தான். தசரதன் மனைவி  கைகேயி, அவள் தோழி மந்தரை, இராமன் முடிசூடுவதனை விரும்பவில்லை. எனவே, கைகேயின் மனத்தை மந்தரை வஞ்சக உரைகளால் மாற்றினாள். மனம் மாறிய கைகேயி, தசரதனிடம் தான்பெற்ற இரு வரங்களைப் பயன்படுத்தி, இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறினாள். மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த ராமனிடம் கைகேயி, “நீ பதினான்கு ஆண்டுகள் காடு செல்லவேண்டும். இது மன்னன் ஆணை” என்றாள். அதனை இராமன் பணிவுடன் ஏற்றான். தன் மனைவி சீதையுடன் தம்பி இலக்குவனுடனும் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைகரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் குகன், இராமனைச் சந்தித்தான். குகனின் வருகை : ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு  நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன் கல்திரள் தோளினான். பொருள் : போர்க்குணம் மிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன். கங்கை யாற்றுத் தோணித்துறைக்குத் தொன்றுவிட்டு  உரிமையுடையவன். பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன். மலைபோன்ற திறண்ட தோள்களை உடையவன். சொற்பொருள் : ஆயகாலை – அந்த நேரத்தில். அம்பி – படகு நாயகன் – தலைவன். நாமம் – பெயர். துறை – தோணித்துறை. தொன்மை – தொன்றுதொட்டு. கல் – மலை. திரள் – திரட்சி. காயும் வில்லினன் – பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன். இலக்கணக் குறிப்பு : போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. கல்திரள்தோள் – உவமைத்தொகை. குகனின் தோற்றம் : துடியம் நாயினன் தோல்செருப்பு ஆர்த்தபேர் அடியன் அல்செறிந் தன்ன நிறுத்தினான், நெடிய தானை நெருங்கலின் நீர்முகில் இடியி னோடுஎழுந் தாலன்ன பொருள் : குகன் துடியென்றும் பறை உடையவன். வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன். தோள் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவன். இருள் போன்ற கரிய நிறத்தையுடையவன். Read More.

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள் செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம் திருவாசகம் இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை நெடுந்தொகை – அகநானூறு பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார் புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை சின்னூல் என்பது – நேமிநாதம் வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம் ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம் பாணாறு – பெரும்பாணாற்றுப்படை முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம். தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள் குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ் உழத்திப்பாட்டு – பள்ளு இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை தமிழர் வேதம் – Read More.