வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்!

ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும். வேர்ச்சொல்  வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது. எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல். 1. அளித்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல் – அளி 2. ஆடினான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – ஆடு 3. அணிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – அணி 4. அறுந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல் – அறு 5. இழப்பர் என்ற சொல்லின் வேர்ச்சொல் – இழ 6. ஈட்டினான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – ஈட்டி 7. உண்பார் என்ற சொல்லின் வேர்ச்சொல் – உண் 8. ஊர்ந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல் – ஊர் 9. எய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – எய் 10. ஒழிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – ஒழி 11. ஓதியவர் என்ற சொல்லின் வேர்ச்சொல் – ஓதி 12. கண்டோம் என்ற சொல்லின் வேர்ச்சொல் – காண் 13. கொய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – கொய் 14. செய்யார் என்ற சொல்லின் வேர்ச்சொல் – செய் 15. சொல்வான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – சொல் 16. தட்டுவான் என்ற சொல்லின் வேர்ச்சொல்  – தட்டு 17.தெளிந்தனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்  – தெளி 18.தொடர்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – தொடர் 19.நின்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல் – நில் 20.பிரித்தார் என்ற சொல்லின் வேர்ச்சொல் – பிரி 21.புகழ்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்- புகழ் 22.பெற்றாள் என்ற சொல்லின் வேர்ச்சொல்- பெறு 23.வென்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்- வெல் 24.வனைந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் – வனை 25.உறங்கினான் என்ற Read More.