பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்!

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். (எடுத்துக்காட்டு ) மெய், வாய், கண், கன்னம் மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைத் தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். ………………………………………………………………………………………………… மூவண்ணம் – காவி, வெண்மை, பச்சை ………………………………………………………………………………………………… மூவேந்தர்கள் – சேரன், சோழன், பாண்டியன் ………………………………………………………………………………………………… முக்கனி – மா, பலா, வாழை ………………………………………………………………………………………………… முத்தமிழ் – இயல், இசை, நாடகம் ………………………………………………………………………………………………… முப்பால் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ………………………………………………………………………………………………… முக்காலம் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ………………………………………………………………………………………………… முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ………………………………………………………………………………………………… மூன்று முரசு – கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு ………………………………………………………………………………………………… முச்சங்கம் – முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ………………………………………………………………………………………………… மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை ………………………………………………………………………………………………… நாற்திசை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ………………………………………………………………………………………………… நாற்பால் – அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் ………………………………………………………………………………………………… நால்வகை உணவு – உண்ணல், தின்னல், பருகல், நக்கல் ………………………………………………………………………………………………… நால்வகை சொல் – பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ………………………………………………………………………………………………… நான்மறை – ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ………………………………………………………………………………………………… நான்கு குணம் – அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. ………………………………………………………………………………………………… நாற்படை – தேர், யானை, குதிரை, காலாட்படை. ………………………………………………………………………………………………… பாவகை – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ………………………………………………………………………………………………… ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி. ………………………………………………………………………………………………… ஐஞ்சிறுங்காப்பியங்கள் – சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம். ………………………………………………………………………………………………… ஐந்திலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ………………………………………………………………………………………………… ஐந்தொகை – முதல், Read More.