பெயர்ச்சொல் வகையறிதல்

பெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல்  பெயர்ச்சொல் என்றால் என்ன? ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ/காரணமாகவோ இருக்கலாம்.. இடுகுறிபெயர்: ஒரு பொருளுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டு : மண், மலை, மரம் காரணப்பெயர்: ஒரு பொருளுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டு : முக்காலி, நாற்காலி பெயர்ச்சொல்லின் வகைகள்: பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். பொருட்பெயர் எடுத்துக்காட்டு : பணம்,மனிதன்,விலங்கு,மரம் இடப்பெயர் எடுத்துக்காட்டு : பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர் காலப்பெயர் எடுத்துக்காட்டு : மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை சினைப்பெயர் எடுத்துக்காட்டு : கை,கால்,இலை,காம்பு,காய்,பூ பண்புப்பெயர் எடுத்துக்காட்டு : வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை தொழிற்பெயர் எடுத்துக்காட்டு : எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்