பிழை நீக்கி எழுதுதல்

              பிழை நீக்கி எழுதுதல் வணக்கம் தோழர்களே ! இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது எனப் பார்ப்போம்.. 1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல் 2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல் 3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல் 4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல் 5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்            மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் அமையும். இவற்றை  ஒருமுறை ஆழ்ந்து படித்தால் மனதில் நின்றுவிடும்.ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு வினா என ஐந்து வினாக்கள் கேட்கப்படலாம். 1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல் எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம். வல்லினம் மிகும் இடங்கள் 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)அந்தத் தோட்டம் இந்தக் கிணறு எந்தத் தொழில் அப்படிச் செய்தான் இப்படிக் கூறினான் எப்படிப் பார்ப்போம் ————————————————————————————————————- 2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும். (எ.கா)பொருளைத் தேடினான் புத்தகத்தைப் படித்தான் ஊருக்குச் சென்றான் தோழனுக்குக் கொடு ———————————————————————————————————— 3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும். (எ.கா)படிப்பதாகச் சொன்னார் போய்ச் சேர்ந்தான் ————————————————————————————————————– 4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும். (எ.கா)சாலப் பேசினான் தவச் சிறிது ———————————————————————————————————— 5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும். (எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி ———————————————————————————————————— 6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும். (எ.கா)தைப்பாவை தீச்சுடர் ———————————————————————————————————— 7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும். (எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல் ———————————————————————————————————- 8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ———————————————————————————————————— 9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும் (எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து ———————————————————————————————————– 10. உயிரீற்றுச் சொற்களின் பின் Read More.