சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்!

சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும்.   எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி  அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா) அ. காலையில் கந்தன் எழுந்தவுடன் சென்றான் வேலைக்கு ஆ.காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான் இ.கந்தன் சாலையில் எழுந்தவுடன் வேலைக்கும் சென்றான் ஈ.வேலைக்குச் சொன்றான் கந்தன் சாலை எழுந்தவுடன் விடை இ. கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் பொன்மொழிகளும் புகழ்பெற்ற மேற்கோள்களும் கேட்கப்படும்.மொத்தம் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்  சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்   1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க ஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும். 2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார் ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார் இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை ஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர். 3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர் ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும் இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர். 4.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.  5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக ஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் Read More.