ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள். ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணமாக தை.. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்: அ வரிசை: அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ – பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு. உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம் ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு ஒ – மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா. ஔ – பூமி, ஆனந்தம் க வரிசை: க – வியங்கோள்  விகுதி கா – காத்தல், சோலை கி – இரைச்சல் ஒலி கு – குவளயம் கூ – பூமி, கூவுதல், உலகம் கை – உறுப்பு, Read More.