வாக்கிய வகை அறிதல்

கருத்து முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும். வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும், அமைப்பு அடிப்படையிலும், வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். கருத்து வகை வாக்கியங்கள் கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை: செய்தி வாக்கியம் கட்டளை வாக்கியம் வினா வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும். எ.கா: ஔவையார் ஆத்திச்சூடியை எழுதினார். கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும். எ.கா: புத்தகத்தைப் படி. வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும். எ.கா: ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும். எ.கா: இந்த மலர் எவ்வளவு அழகாக உள்ளது! அமைப்பு வகை வாக்கியங்கள் வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, தனி வாக்கியம் தொடர் வாக்கியம் கலவை வாக்கியம் தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும். எ.கா: அமுதா வந்தாள். அமுதாவும் கவிதாவும் வந்தனர். தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும். எ.கா: இனியன் நன்கு படித்தான்; தேர்வு எழுதினான்; வெற்றி பெற்றான். கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும். எ.கா: நல்ல நெறிகளைக் கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும். வினை வகை வாக்கியங்கள் வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள் செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள் தன்வினை / பிறவினை வாக்கியங்கள் உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள் இவ்வகை Read More.

மோனை, எதுகை , இயைபு

மோனைத்தொடை: பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதல் எழுத்து ஒன்றி (பொருந்தி) வருவது. எ.கா: உள்ளத்தில் உள்ளானடி – அது நீ உணர வேண்டு மடி உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில் உள்ளேயும் காண்பா யடி அடிமோனை: செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்தஅடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும். இன எழுத்தும் மோனையாக அமையும். எ.கா: நாணால் உயிரைத் துறப்பார் நாண் துறவார் சீர்மோனை: 1. இணை மோனை: அளவடியில் 1,2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது. இன எழுத்தும் மோனையாக அமையும். எ.கா: கமழத் கமழத் தமிழிசை பாடினாள். 2. பொழிப்பு மோனை: அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது. எ.கா: நண்பற்றா ராகி நயமில் செய்தார்க்கும் 3. ஒருஉ மோனை அளவடியில் 1,4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது. எ.கா: அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் 4. கூழை மோனை அளவடியில் 1, 2, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது. எ.கா: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 5. மேற்கதுவாய் மோனை அளவடியில் 1, 3, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றிவருவது. எ.கா: பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் 6. கீழ்க்கதுவாய் மோனை அளவடியில் 1, 2, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது. எ.கா: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை 7. முற்று மோனை: அளவடியில் 1, 2, 3, 4 சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை எனப்படும். அனைத்துச் சீர்களிலும் மோனை இருக்கும். எ.கா: கண்ணும் கருத்துமாய் கலைகளைக் கற்றான் எதுகைத் தொடை எதுகைத் தொடை என்பது ஒரு பாடலில் உள்ள அடிகள்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும். இது மட்டுமன்றி, அடிகளில் உள்ள முதல் எழுத்துக் குறில் என்றால், எல்லா அடிகளிலும் குறிலாகவும், நெடில் என்றால் எல்லா அடிகளின் முதல் எழுத்தும் Read More.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்!

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். (எடுத்துக்காட்டு ) மெய், வாய், கண், கன்னம் மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைத் தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். ………………………………………………………………………………………………… மூவண்ணம் – காவி, வெண்மை, பச்சை ………………………………………………………………………………………………… மூவேந்தர்கள் – சேரன், சோழன், பாண்டியன் ………………………………………………………………………………………………… முக்கனி – மா, பலா, வாழை ………………………………………………………………………………………………… முத்தமிழ் – இயல், இசை, நாடகம் ………………………………………………………………………………………………… முப்பால் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ………………………………………………………………………………………………… முக்காலம் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ………………………………………………………………………………………………… முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ………………………………………………………………………………………………… மூன்று முரசு – கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு ………………………………………………………………………………………………… முச்சங்கம் – முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ………………………………………………………………………………………………… மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை ………………………………………………………………………………………………… நாற்திசை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ………………………………………………………………………………………………… நாற்பால் – அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் ………………………………………………………………………………………………… நால்வகை உணவு – உண்ணல், தின்னல், பருகல், நக்கல் ………………………………………………………………………………………………… நால்வகை சொல் – பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ………………………………………………………………………………………………… நான்மறை – ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ………………………………………………………………………………………………… நான்கு குணம் – அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. ………………………………………………………………………………………………… நாற்படை – தேர், யானை, குதிரை, காலாட்படை. ………………………………………………………………………………………………… பாவகை – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ………………………………………………………………………………………………… ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி. ………………………………………………………………………………………………… ஐஞ்சிறுங்காப்பியங்கள் – சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம். ………………………………………………………………………………………………… ஐந்திலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ………………………………………………………………………………………………… ஐந்தொகை – முதல், Read More.

பொருத்துதல்

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் 1.பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் இப்பகுதில் பிரிவு அ வில் உள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை பிரிவு ஆ வில் உள்ள 4 சொற்களுக்கும் பொறுத்த வேண்டும். இதிலிருந்து மூன்று முதல் ஐந்து கேள்விகள் கேட்கபடுகிறது, எனவே நீங்கள் இதற்காக நன்கு பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்.இதற்கு நீங்கள் 6 to 10 புத்தகத்தில் உள்ள செய்யுள்களின் பாடல்வரிகளின் பொருளை நன்கு புரிந்து படிக்கவேண்டும். பொருத்துதல்  புரை – குற்றம் குழவி – குழந்தை  ஆடுபரி – ஆடுகின்ற குதிரை  துன்னலர் – பகைவர் கலைமடந்தை – கலைமகள் நீரவர் – அறிவுடையார் அகம் – உள்ளம்  அல்லல் – துன்பம்  புனைதல் – புகழ்தல்  அங்கண் – அழகிய இடம்  ஆமா – காட்டுப்பசு  ஆற்றுணா – கட்டுச்சோறு  இருந்தி – பெருஞ்செல்வம்  இரும்பை – பாம்பு  ஈட்டம் – கூட்டம்  ஈங்கதிர் – சந்திரன்  உரன் – திண்ணிய அறிவு  உலண்டு – கோற்புழு  உகுநீர் – ஒழுகும் நீர்  ஊழை – பித்தம்  எழினி – இருதிரை  எறும்பி – யானை  எருத்தம் – பிடரி, கழுத்து  கவர்தல் – நுகர்தல்  ஈன்றல் – தருதல், உண்டாக்குதல்  சிறுமை – துன்பம்  மறுமை – மறுபிறவி  நன்றி – நன்மை  அல்லவை – பாவம்  துவ்வாமை – வறுமை  அமர்ந்து – விரும்பி  அகன் – அகம், உள்ளம்  படிறு – வஞ்சம்  செம்பொருள் – மெய்ப்பொருள்  பீற்றல் குடை – பிய்ந்த குடை  கடையர் – தாழ்ந்தவர்  விழுச்செல்வம் – சிறந்த செல்வம்  நுனி – மிகுதி  முழவு – மத்தளம்  வனப்பு – அழகு  தூறு – புதர்  மெய்ப்பொருள் – நிலையான பொருள்  வண்மை – கொடைத்தன்மை 2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:- பதினொன் Read More.

பெயர்ச்சொல் வகையறிதல்

பெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல்  பெயர்ச்சொல் என்றால் என்ன? ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ/காரணமாகவோ இருக்கலாம்.. இடுகுறிபெயர்: ஒரு பொருளுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டு : மண், மலை, மரம் காரணப்பெயர்: ஒரு பொருளுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டு : முக்காலி, நாற்காலி பெயர்ச்சொல்லின் வகைகள்: பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். பொருட்பெயர் எடுத்துக்காட்டு : பணம்,மனிதன்,விலங்கு,மரம் இடப்பெயர் எடுத்துக்காட்டு : பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர் காலப்பெயர் எடுத்துக்காட்டு : மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை சினைப்பெயர் எடுத்துக்காட்டு : கை,கால்,இலை,காம்பு,காய்,பூ பண்புப்பெயர் எடுத்துக்காட்டு : வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை தொழிற்பெயர் எடுத்துக்காட்டு : எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

பிழை நீக்கி எழுதுதல்

              பிழை நீக்கி எழுதுதல் வணக்கம் தோழர்களே ! இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது எனப் பார்ப்போம்.. 1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல் 2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல் 3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல் 4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல் 5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்            மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் அமையும். இவற்றை  ஒருமுறை ஆழ்ந்து படித்தால் மனதில் நின்றுவிடும்.ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு வினா என ஐந்து வினாக்கள் கேட்கப்படலாம். 1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல் எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம். வல்லினம் மிகும் இடங்கள் 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)அந்தத் தோட்டம் இந்தக் கிணறு எந்தத் தொழில் அப்படிச் செய்தான் இப்படிக் கூறினான் எப்படிப் பார்ப்போம் ————————————————————————————————————- 2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும். (எ.கா)பொருளைத் தேடினான் புத்தகத்தைப் படித்தான் ஊருக்குச் சென்றான் தோழனுக்குக் கொடு ———————————————————————————————————— 3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும். (எ.கா)படிப்பதாகச் சொன்னார் போய்ச் சேர்ந்தான் ————————————————————————————————————– 4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும். (எ.கா)சாலப் பேசினான் தவச் சிறிது ———————————————————————————————————— 5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும். (எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி ———————————————————————————————————— 6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும். (எ.கா)தைப்பாவை தீச்சுடர் ———————————————————————————————————— 7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும். (எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல் ———————————————————————————————————- 8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ———————————————————————————————————— 9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும் (எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து ———————————————————————————————————– 10. உயிரீற்றுச் சொற்களின் பின் Read More.

பிரித்து எழுதுக

தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம். இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விடத்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கட்டப்பட வேண்டிய-தொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசன நடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ? இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விசயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப் படிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும். ஆகவே சந்திபிரித் தெழுதும் விசயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க. – பரிதிமாற்கலைஞர் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

தொடரும் தொடர்பும் அறிதல்

தொடரும் தொடர்பும் அறிதல்: கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே  தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும். இதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் – அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம். தொடர் : இங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை  அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான    சொற்களைக் கொண்ட தொடர்  ஆகும். தொடர்பு: கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும். தொடரும் தொடர்பும்:   தேசியக் கவி, சிந்துக்குத் தந்தை,விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி,ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த்  தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்                                     பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல்கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி – பாரதிதாசன்      எந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்? ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும் சான்றோர்களையும்  அவர்கள் தொடர்பான பட்டப்பெயர்களையும் நூல்களையும்  நூல்கள் தொடர்பான புகழாரங்களையும் ஒன்று திரட்டி வாசித்தாலே இது போன்ற வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்..  வினா மாதிரி:

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்!

சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும்.   எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி  அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா) அ. காலையில் கந்தன் எழுந்தவுடன் சென்றான் வேலைக்கு ஆ.காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான் இ.கந்தன் சாலையில் எழுந்தவுடன் வேலைக்கும் சென்றான் ஈ.வேலைக்குச் சொன்றான் கந்தன் சாலை எழுந்தவுடன் விடை இ. கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் பொன்மொழிகளும் புகழ்பெற்ற மேற்கோள்களும் கேட்கப்படும்.மொத்தம் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்  சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்   1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க ஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும். 2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார் ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார் இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை ஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர். 3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர் ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும் இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர். 4.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.  5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.  அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக ஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் Read More.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்

விளக்கம் :  கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கானபொருளைத்தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும்வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர,லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல்வேண்டும். ளகர–லகரப் பொருள் வேறுபாடு ரகர–றகர பொருள் வேறுபாடுகள்   னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு