கம்பராமாயணம்

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.

முன்கதைச் சுருக்கம் : 
அயோத்தியா மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர். தசரதன், தன் மூத்த மகன் இராமனுக்கு முடிசூட்ட விழைந்தான். தசரதன் மனைவி கம்பராமாயணம்
கைகேயி, அவள் தோழி மந்தரை, இராமன் முடிசூடுவதனை
விரும்பவில்லை. எனவே, கைகேயின் மனத்தை மந்தரை வஞ்சக உரைகளால் மாற்றினாள். மனம் மாறிய கைகேயி, தசரதனிடம் தான்பெற்ற இரு வரங்களைப் பயன்படுத்தி, இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறினாள். மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த ராமனிடம் கைகேயி, “நீ பதினான்கு ஆண்டுகள் காடு செல்லவேண்டும். இது மன்னன் ஆணை” என்றாள். அதனை இராமன் பணிவுடன் ஏற்றான். தன் மனைவி சீதையுடன் தம்பி இலக்குவனுடனும் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில்
கங்கைகரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் குகன், இராமனைச் சந்தித்தான்.

குகனின் வருகை :

ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு  நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.

பொருள் :
போர்க்குணம் மிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்.
கங்கை யாற்றுத் தோணித்துறைக்குத் தொன்றுவிட்டு  உரிமையுடையவன். பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன். மலைபோன்ற திறண்ட தோள்களை உடையவன்.

சொற்பொருள் :

 • ஆயகாலை – அந்த நேரத்தில். அம்பி – படகு
  நாயகன் – தலைவன். நாமம் – பெயர். துறை – தோணித்துறை.
  தொன்மை – தொன்றுதொட்டு. கல் – மலை. திரள் – திரட்சி.
  காயும் வில்லினன் – பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்.

இலக்கணக் குறிப்பு :

 • போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்
  தொக்க தொகை.
 • கல்திரள்தோள் – உவமைத்தொகை.

குகனின் தோற்றம் :

துடியம் நாயினன் தோல்செருப்பு ஆர்த்தபேர் அடியன் அல்செறிந் தன்ன நிறுத்தினான்,
நெடிய தானை நெருங்கலின் நீர்முகில் இடியி னோடுஎழுந் தாலன்ன

பொருள் :
குகன் துடியென்றும் பறை உடையவன். வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன். தோள் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவன். இருள் போன்ற கரிய நிறத்தையுடையவன். கரிய
மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போன்ற மிகுதியான படைபலம் உடையவன்.

சொற்பொருள் :

 • துடி – பறை. அல் – இருள்.

இலக்கணக் குறிப்பு :

 • நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • ஈட்டினான் = ஈட்டு + இன் + ஆன். ஈட்டு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

குகன் இராமனைக் காண வருதல் :

சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்  மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தான் இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான்.

பொருள் :
அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள
சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன் குகன். இவர்,
முனிவர்தம் தவச்சாலையிலுள்ள வள்ளல் இராமனைக் காணத் தேனும்மூனும் கொண்டுச் சென்றான். (அரசன், குரு, தெய்வம் ஆகியோரைக் காணச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லாகாது என்பது தமிழ்மரபு.)

சொற்பொருள் :

 • கூவா முன்னர் – அழைக்கும் முன்னர், குறுகி – நெருங்கி.
  இறைஞ்சி – வணங்கி. சேவிக்க – வணங்க.
  நாவாய் – படகு.

இலக்கணக் குறிப்பு :

 • கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
 • குறுகி, சேவிக்க – வினையெச்சம்.
 • கழல் – தானியாகுபெயர்.
 • வந்தனென், தீர்கிலேன், செங்குவென் – தன்மை ஒருமை வினைமுற்று.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • இறைஞ்சினான் = இறைஞ்சி + இன் + ஆன். இறைஞ்சு – பகுதி, இன் –
  இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
 • வந்தனென் = வா(வ) + த் (ந்) + அன் + என். வா – பகுதி, வ – எனக்
  குறுகியது விகாரம், த் – சந்தி, த் – ந் ஆனது விகாரம், த் – இறந்தகால
  இடைநிலை அன் – சாரியை, என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

இராமன் இலக்குவனிடம் குகனை அழைத்துவரப் பணித்தலும்
வந்த குகன் பணிதலும்

அண்ணலும் விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றா

பொருள் :

இராமன் விருப்பத்துடன், “அன்னவனை என்னிடம் அழைத்து வருவாய்” என்றான். இலக்குவான் குகனை “வருக” என்றவுடன், குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டு களித்தான், இருள்போன்ற நீண்டமுடியுடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின் எழுந்து, வாயைக் கையால் பொத்தி, உடலை வளைத்து அடக்கமாக நின்றான்.

சொற்பொருள் :

 • பண்ணவன் – நற்குணங்கள் பல உடைய இலக்குவன். பரிவு – இரக்கம், குஞ்சி – தலைமுடி, மேனி – உடல்.

இலக்கணக் குறிப்பு :

 • அழைத்தி (அழைப்பாய்) – முன்னிலை ஒருமை வினைமுற்று.
 • வருக – வியங்கோள் வினைமுற்று.
 • பணிந்து, வளைத்து, – வினையெச்சங்கள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

புக்கான் = புகு(புக்கு) + ஆன். புகு – பகுதி, புகு – புக்கு எனப் பகுதி
ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது. ஆன் – ஆண்பால்.
வினைமுற்று விகுதி.

தேனும் மீனும் விருப்பத்துடன் கொண்டு வந்ததாக  குகன் கூறுதல் :

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன், எல்லை நீத்த
அருத்தியன், தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்.

பொருள் :

 • உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன்
  கொண்டு வந்த இப்பொருள்கள் கிடைத்ததற்கரியன. அமுதத்தைவிடச் சிறந்தன. இவை எத்தகையவனாய் இருப்பினும் தூய்மையானவையே! எம்போன்றோர்க்கும் உரியன. ஆகையால் இனிமையான இவை நாங்கள் விரும்பி உண்டதற்கும் சமம்.

சொற்பொருள் :

 • சீர்த்தது – சிறந்தது, பவித்திரம் – தூய்மையானது.
  இனிதின் – இனிமையானது. உண்டனெம் – உண்டோம் என்பதற்குச்
  சமமானது. தழீஇய – கலந்த.

இலக்கணக் குறிப்பு :

 • அமைந்த காதல் – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம் :

 • சீர்த்த = சீர் + த் + த் + அ. சீர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால
  இடைநிலை, அ – பலவின்பால் வினைமுற்று விகுதி.
 • உண்டெனம் – உண் + ட் + அன் + எம். உண் – பகுதி, ட் – இறந்தகால
  இடைநிலை, அன் – சாரியை, எம் – தன்மைப்பன்மை வினைமுற்று
  விகுதி.

குகன் வேண்டுகோள் :

கார்குலாம் நிறந்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இனப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ நேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான்.

பொருள் :

கரிமுகில் வண்ணனாகிய இராமன் கூறியதைக் கேட்ட குகன், இவ்வுலகம் அனைத்திற்கும் செல்வம் போன்றவனே! தங்களை இத்தவக் கோலத்தில் பார்த்த என்னிரு கண்களை எடுக்க முடியாத நிலையில் உள்ள கள்வன் நான். இம்மனத்துயரத்தோடு என்னிருப்பிடம் செல்லத் துணியேன். ஐயனே தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன் என்றான்.

சொற்பொருள் :

 • கார்குலாம் – மேகக்கூட்டம். பார்குலாம் – உலகம் முழுதும்.
  இன்னல் – துன்பம். ஈர்கிலா – எடுக்க இயலாத.
  தீர்கிலேன் – நீங்கமாட்டேன். அடிமை செய்குவேன் – பணிசெய்வேன்.

இலக்கணக் குறிப்பு :

 • கார்குலாம் (காரது குலாம்) – ஆறாம் வேற்றுமைத்தொகை .
 • உணர்த்துவான் (உணர்த்துபவன்) – வினையாலணையும் பெயர்.
 • பார்த்தகண்ணை – பெயரெச்சம்.
 • தீர்கிலேன் (நீங்கமாட்டேன்), செய்குவேன் (செய்வேன்) – தன்மை ஒருமை வினைமுற்றுகள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • உணர்த்துவான் = உணர்த்து + வ் + ஆன். உணர்த்து – பகுதி,
  வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

குகனைத் தன்னுடன் இருக்க இராமன் அனுமதியளித்தல் :

கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய இருத்திஈண்டு எம்மோ டென்றான்.

பொருள் :

கோதண்டம் என்னும் வில்லேந்திய ஆடவரில் நல்லவனாகிய இராமபிரான், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். சீதையின் திருமுகத்தைப் பார்த்தும், தம்பி இலக்குவனன் திருமுகத்தைப் பார்த்தும், இவன் நம்மிடத்து நீங்காத பரிவு உடையவன்
என்றுரைத்தான். அருள் நிறைந்த பார்வையுடைய இராமன் குகனை
நோக்கி எல்லாவற்றிலும் இனிய நண்பனே இவ்விடத்தில் எம்மோடு
இருப்பாயாக! என்றான்.

சொற்பொருள் :

 • குரிசில் – தலைவன், இருத்தி – இருப்பாயாக.

இலக்கணக்குறிப்பு :

 • தீராக்காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
 • மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்.
 • இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • கேட்டான் = கேள் (ட்) + ட் + ஆன். கேள் – பகுதி, ள் – ட் ஆனது
  விகாரம், ட் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று
  விகுதி.
 • நோக்கி – நோக்கு + இ. நோக்கு – பகுதி – பகுதி, இ – வினையெச்ச
  விகுதி.

குகன் கொண்டுவந்த படகில் மூவரும் புறப்படல்

பொருள் :

இராமனின் மனக்குறிப்பை அறிந்த குகன் மிகவிரைவாகச் சென்றான். பெரியதோர் படகைக் கொண்டு வந்தான். தாமரைமலர் போன்ற கண்களை உடைய இராமன் அந்தணர்களிடம் விடைபெற்று, பிறைநிலவு போன்ற நெற்றியை உடைய சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் படகில் இனிதாக ஏறினான்.

இலக்கணக்குறிப்பு :

 • நெடுவாய் (நெடுமை + நாவாய்) – பண்புத்தொகை.
 • தாமரை நயனம் (தாமரை போன்ற கண்கள்) – உவமைத்தொகை.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • சென்றனன் – செல் (ன்) + ற் + அன். செல் – பகுதி, ல் – ந் ஆனது
  விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை, அன் –
  ஆண்பால் வினைமுற்று விகுதி.
 • தந்தனன் – தா + த் (ந்) + த் + அன். தா – பகுதி, தா – த எனக்
  குறுகியது விகாரம், த் – சந்தி, த் – ந் ஆனது விகாரம், த் – இறந்தகால
  இடைநிலை, அன் – சாரியை, அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

குகன் படகைச் செலுத்துதல் :

விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும் முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்  இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்

பொருள் :

விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோலக் குகனும் விரைவாகச் செலுத்தினான். மடங்கிவிழும்
அலைகளையுடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதைபோலப் படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனல்பட்ட மெழுகுபோல் துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றார்கள்.

சொற்பொருள் :

 • கடிது – விரைவாக, முடுகினன் – செலுத்தினான்,
  முரிதிரை – மடங்கிவிழும் அலை, இடர் – துன்பம்.

இலக்கணக்குறிப்பு :

 • நனிகடிது – உரிச்சொற்றொடர்.
 • நெடுவாய், நெடுநீர் – பண்புத்தொகைகள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • முடுகினன் = முடுகு + இன் + அன். முடுகு – பகுதி,
  இன் – இறந்தகால இடைநிலை, அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
 • நின்றார் = நில் (ன்) + ற் + ஆர். நில் – பகுதி, ல் – ந் ஆனது விகாரம்,
  ற் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

பிரித்தறிதல் :

 • நெடுவாய் = நெடுமை + நாவாய்.
 • நெடுநீர் = நெடுமை + நீர்.

குகனும் உடன்வருவதாக நவின்றபோது இராமன் கூற்று :

அன்னவன் உரைகளோ அமலனும் உரைநேர்வான்
என்னுயிர் அனையாய்நீ, இளவனுன் இளையான், இந்
நன்னுத லவள்நின்கேள், நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடை யது,நானுன் தொழில்உரி மையின்உள்ளேன்.

பொருள் :

குகன் கூறியதைக் கேட்ட குற்றமற்றவனாகிய இராமன், என் உயிர்போன்றவன் நீ, இலக்குவன் உன் தம்பி, சீதை உன் கொழுந்தி, நீர் சூழ்ந்த இந்நிலவுலகம் முழுவதும் உன்னுடையது. நான் உனது ஆளுகைக்குரியவன்.

சொற்பொருள் :

 • அமலன் – குற்றமற்றவன், நுதல் – நெற்றி.

இலக்கணக்குறிப்பு :

 • என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை.
 • நன்னுதல் – பண்புத்தொகை.
 • நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை.

பகுபத உறுப்பிலக்கணம் :

 • நேர்வான் = நேர் + வ் + ஆன். நேர் – பகுதி, வ் – இறந்தகால
  இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

துன்புள தெனின் அன்றோ சுகமுனது அதுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுள் தென உன்னா அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம்.

பொருள் :

துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை. இப்பிரிவு இடைக்காலத்தே, அதனை நினைத்து வருந்த வேண்டா, முன்னர் நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தோம்.விரிந்த அன்பினால் இனி உன்னோடு ஐவரானோம்.

சொற்பொருள் :

 • துன்பு – துன்பம், உன்னேல் – நினைக்காதே.

ஆசிரியர் குறிப்பு :

கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பர்இவ்வூர் நாகை மாவட்டத்தில்  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தையார் ஆதித்தன்.
கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தார். கம்பர் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவர் செய்நன்றி மறவா
இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம்
பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.

கம்பர் இயற்றிய பிற நூல்கள் :

1. சடகோபரந்தாதி.
2. ஏரெழுபது.
3. சரசுவதி அந்தாதி.
4. திருக்கை வழக்கம்.

இவர் காலத்து புலவர்கள் :

1. சயங்கொண்டார் .
2. ஒட்டக்கூத்தர்.
3. புகழேந்தி.

கம்பரின் பெருமையை அறிய உதவும் தொடர்கள் :

 • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
 • விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்.
 • கல்வியிற் பெரியவர் கம்பர்.
 • யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் கம்பரைப்
  புகழ்ந்து பாடியுள்ளார்.

நூற்குறிப்பு :

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.
வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத்
தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய
இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய
நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்.

கம்பராமாயணத்தின் உள்ள காண்டங்கள் :

 • கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அவை1. பாலகாண்டம்.
  2. அயோத்தியா காண்டம்.
  3. ஆரண்ய காண்டம்.
  4. கிட்கிந்தா காண்டம்.
  5 .சுந்தர காண்டம்.
  6. யுத்த காண்டம்.
 • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது.
 • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் கதி என்பர் பெரியோர்.
 • கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. பொருள், அணி, நடை ஆகியவற்றால்சிறந்தது. கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.
 • கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். இதில் பதின்மூன்று படலங்கள் உள்ளன. இப்பகுதியில் இருக்கும் குகப்படலம் ஏழாம் படலமாகும். இதனைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.
Spread the Knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *