அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

 ணக்கம் உறவுகளே…டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் 4- க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை  பார்த்திருப்பீர்கள்..அதில் 20 வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது.நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்ததுதான். ஆனாலும் அதில் எல்லோருக்கும் சிறு சிறு குழப்பங்கள் வரும்.அதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பதிகம்.எனவே தமிழைப் பொறுத்தவரை 100 வினாக்களுக்கும் சரியான பதிலை எளிதாக எழுதிவிட முடியும்.அனைத்தும் தமிழ் பொழிப்பயிற்சிக்காகத்தான் கேட்கப்படுகின்றன.

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி?

பொருள்:

இடம் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் .

அகர வரிசைப் படி சொர்களை சீர் செய்வதில் நினைவில் கொள்ள வேண்டிய வரிசை முறை கீழ் வருமாறு அமைய வேண்டும்.

நிலை -1

உயிரெழுத்துக்கள்[அதாவது : அ,ஆ,இ,ஈ வரிசையில் அமைய வேண்டும்.]

(எ.கா):
ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்
விடை:
அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம்

நிலை -2

மெய்யெழுத்துக்கள்

(எ.கா):
நன்மை, நம்பகம் , நல்லது , நட்சத்திரங்கள்
விடை:
நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை

நிலை -3

உயிர் மெய் எழுத்துக்கள்[அதாவது : க,கா,கி,கீ வரிசையில் அமைய வேண்டும்.]

முக்கியக்குறிப்பு: எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது.

(எ.கா):
மிருகம், முத்து, மௌனம், மதி
விடை:
மதி , மிருகம், முத்து , மௌனம்

Spread the Knowledge